மணிப்பூர் பழங்குடி மக்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் மணிப்பூர் பழங்குடி மக்களை பாதுகாக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வெங்கடேசன், பழங்குடி மக்கள் நல முன்னேற்ற சங்க நிர்வாகி தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் மகாசபை
அகில இந்திய விவசாயிகள் மகா சபை பழங்குடியினர் போராட்ட முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னணி அமைப்பின் நிர்வாகி கோபி தலைமை தங்கினார்.
மணிப்பூரில் பழங்குடியினருக்கு நீதி வேண்டும், பழங்குடியினரிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து நிலங்களையும் மீட்டெடுப்போம், வன உரிமை சட்டம் 2006-ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்த் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.