விடுபட்ட கிராமங்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்


விடுபட்ட கிராமங்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விடுபட்ட கிராமங்களுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இதில் ஒரு சில கிராமங்களுக்கு பயிக்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் உள்ளது.. இந்த விடுபட்ட கிராமங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சீர்காழி ஒன்றிய செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய துணைத்தலைவர் கம்பதாசன், விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் சிவராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நீதிசோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வீரராஜ், அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.அணி) சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டனர். சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவில் விடுபட்ட அனைத்து கிராமத்திற்கும் பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story