சாலையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ராமேசுவரத்தில் சாலையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் லட்சுமணத்தீர்த்தம் முதல் வேர்கோடு வரையிலான நகராட்சிக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைத்து சாலை அமைக்க வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மண்டல தலைவர் சிகாமணி, ராமேசுவரம் நகரசபை சேர்மன் நாசர் கான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் முருகானந்தம், ம.தி.மு.க. பொறுப்பாளர் கெவின் குமார், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சகாயராஜ், நகர் தலைவர் ராஜீவ் காந்தி, மனிதநேய மக்கள் கட்சி நகர் தலைவர் இப்ராகிம்சா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகராஜன், திராவிடர் கழக மண்டபம் ஒன்றிய தலைவர் தேவசகாயம், செயலாளர் காமராசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.