குப்பைகளை தரம் பிரிக்க மாணவிகளுக்கு செயல்விளக்கம்


குப்பைகளை தரம் பிரிக்க மாணவிகளுக்கு செயல்விளக்கம்
x

பொள்ளாச்சி நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்க மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிக்க மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகராட்சி சார்பில் என் குப்பை, என் பொறுப்பு என்ற தலைப்பில் குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்தும், டெங்கு காய்ச்சல் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளாஸ்டிக், கண்ணாடி என 3 ஆயிரம் மக்காத பொருட்கள் உள்ளன. பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து நல்ல உரமாக தயாரித்து விற்பனை செய்கிறோம். நாப்கின் போன்றவற்றை ரோட்டில் வீசி எறியக் கூடாது. ஒரு பேப்பரில் வைத்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்து கொள்வது நமது கடமையாகும். மாணவிகள் இதுகுறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

செயல்விளக்கம்

தற்போது பெய்து மழையின் காரணமாக டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகின்றன. டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாவதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படும். வீட்டில் குளிர்சாதன பெட்டியின் பின்புறம் தேங்கும் தண்ணீரிலும் கொசுக்கள் உற்பத்தியாகும். இதன் மூலம் எளிதில் நோய் தாக்குதல் ஏற்படும். எனவே சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அரசு ஆஸ்பத்திரி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தனி, தனியாக வைத்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை சொர்ணமணி, சுகாதார ஆய்வாளர்கள் எம்.சிவக்குமார், சீனிவாசன், மணிகண்டன், செல்வம், சிவக்குமார், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story