அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி ஆர்ப்பாட்டம்


அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்ேகாரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2023 2:15 AM IST (Updated: 3 Sept 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


இடங்களை வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


வீடுகளை அகற்ற முயற்சி


பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட டி.கோட்டாம்பட்டி அண்ணா நகரில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாக தனியார் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் வீடுகளை இடிக்க சென்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின் இணைப்புகளை துண்டித்து விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.


ஆர்ப்பாட்டம்


இந்த நிலையில் அண்ணா நகர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், அண்ணா நகர் ஆதிதிராவிட மக்கள் குடியிருப்பை வெளியேற்ற நினைக்கும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். அண்ணா நகரில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் படிப்பு பாதிக்காமல் இருக்க குடியிருக்கும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்.


முறைகேடு


இடம் வகை மாற்றுவதில் முறைகேடு செய்த நகராட்சி, தாலுகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தான செட்டில்மெண்ட் நிலத்தை தனியாருக்கு வழங்கிய பத்திரப்பதிவை ரத்து செய்யவும், கே.ஆர்.ஜி.பி. நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களை மூடி உள்ள சிமெண்டு கற்களை அகற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



Next Story