பொள்ளாச்சி அருகே மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
பொள்ளாச்சி அருகே மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்கம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கோடங்கிபட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் மண்ணால் ஆன பொருட்கள் என்ற தலைப்பின் கீழ் மண்ணால் செய்யப்படும் பொருட்களான பானை, சட்டி, பூந்தொட்டிகள், மண் கலசம், உருவ பொம்மைகள் ஆகியவற்றை பாரம்பரியமாக தயாரித்து வரும் இராமபட்டிணத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரது கூடத்திற்கு களப்பயணம் சென்றனர். அங்கு, மண்பாண்டங்கள் தயாரிக்கும் விதம், தேவையான மூலப்பொருட்கள், கையால் உருவத்தை உண்டாக்குதல், மெருகூட்டுதல், சூளையில் வெப்பப்படுத்தல் ஆகியன குறித்து தெளிவாக அறிந்து கொண்டனர்.
மேலும் பாரம்பரிய மண்பானை சமையலின் நன்மைகள், உடல் ஆரோக்கியம் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தினகரன், ஆசிரியை சத்தியா ஆகியோர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story