கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தமிழகத்தில் நம்பர் லாட்டரி, கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க அரசை வலியுறுத்தி, நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் உள்பட 22 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, சப்- இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் மற்றும் போலீசார் கைதுசெய்து தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story