டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x

டெங்கு பாதித்த கர்ப்பிணிக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருச்சி

திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் 18 பெரியவர்கள், 17 குழந்தைகள், 7 கர்ப்பிணிகள் என மொத்தம் 42 பேர் சாதாரண காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒரு கர்ப்பிணிக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 பேர் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 10 பேர் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story