டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிவகிரி:
தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்குனர் முரளி சங்கர் ஆலோசனையின்படி, சிவகிரி பேரூராட்சியும், தேவிபட்டணம் ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து சிவகிரி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தின. சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வாசுதேவநல்லூர் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி நலக்கல்வியாளர் ஆறுமுகம் கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி மேற்பார்வையில் சந்திவிநாயகர் கோவில் தெரு, தெற்கு ரதவீதி, ஆர்.சி.சர்ச் தெரு, அம்பேத்கர் தெரு ஆகிய இடங்களில் புகை மருந்து அடித்தல், நிலவேம்பு குடிநீர் வழங்கல், டெங்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கல் மற்றும் வீடுகள் தோறும் சென்று காய்ச்சல் குறித்து கணக்கெடுப்பு ஆகிய பணிகள் நடந்தது. நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் ராஜாராம், குழு மேற்பார்வையாளர் தினேஷ்குமார், துப்புரவு சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முருகையா, இசக்கி, டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.