டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி


டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேசிய டெங்கு தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட மலேரியா அதிகாரி ரமேஷ் தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் நெப்போலியன் வரவேற்றார். இதில் முதுகுளத்தூர் அரசு தொழில் பயிற்சி மாணவர்களுக்கு டெங்கு நோய் தடுக்கும் நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலைய ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், குருநாதன், குப்புசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் தங்கச் செல்வன், ஜெய பாலமுருகன், சுகாதார ஆய்வாளர்கள் பழனிசாமி, மனோகரன், நேதாஜி, கருணாகர சேதுபதி உள்பட சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story