விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில்டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விக்கிரவாண்டி பேரூராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
விழுப்புரம்
விக்கிரவாண்டி பேரூராட்சி மற்றும் வட்டார அரசு மருத்துவமனை சார்பில் விக்கிரவாண்டி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் துணைத் தலைவர் பாலாஜி, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், செயல் அலுவலர் ஷேக் லத்தீப், தலைமை ஆசிரியை சாந்தி, சுகாதார மேற்பார்வையாளர் துரைராஜன், ஆய்வாளர் பாபு, துப்புரவு ஆய்வாளர் ராஜா, மேற்பார்வையாளர் ராமலிங்கம், உதவியாளர் பிரபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று பொதுமக்களிடம் டெங்கு ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story