டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்

கரூர் அரசு கலைக்கல்லூரி சார்பில் நேற்று டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். தாந்தோணிமலை கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சுங்ககேட் மில்கேட் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.

சுற்றுப்புற தூய்மை வாழ்வின் சீர்மை, ஏடீஸ் கொசுவை கொல்வோம் டெங்குவை வெல்வோம். மழைநீரை தேக்காதே கொசு உற்பத்தியை பெருக்காதே என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story