டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
காஞ்சிரங்கால் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவின்பேரில் மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் விஜய் சந்திரன் மேற்பார்வையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்களை அழிப்பதற்கான புகை மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. காமராஜர் காலனி, சோலை நகர் பகுதியில் காஞ்சிரங்கால் ஊராட்சி தலைவர் மணிமுத்து இந்த பணியை தொடங்கி வைத்தார். இந்த பணி ஒரு வார காலத்திற்கு தொடர்ந்து நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சிவகங்கை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர்கள் சதீஷ், கணேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மணிகண்டன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story