டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி தீவிரம்


டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி தீவிரம்
x

பனப்பாக்கம் பேரூராட்சியில் டெங்கு காய்ச்சல், கொரோனா தடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. மொத்தம் 11 ஆயிரத்து 536 பேர் வசித்து வருகின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பரவிவருகிறது. இதனை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகளை தமிழக அரசு ஏற்படுத்திவருகிறது.

பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 2-வது வார்டில் உள்ள திருமுருகன் நகர், முத்தீஷ்வரர் நகர், நேதாஜி நகர், எஸ்.ஜி.பி. நகர், மாணிக்கம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 174 வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க கொசுமருந்து அடிக்கப்பட்டது. மேலும் கொரோனா காய்ச்சல் பரவாமல் இருக்க வீடுதோறும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சியில் வசிக்கும் அனைவரும் முகக்கவசம் பயன்படுத்த பேரூராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story