எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்-தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம்


எஸ்.அய்யம்பாளையம் பகுதியில்  4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல்-தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரம்
x

எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

எஸ்.அய்யம்பாளையம் பகுதியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இதையடுத்து தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

4-ம் வகுப்பு மாணவன்

கோவை சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த நிலையில் அந்த சிறுவனுக்கு திடீரென உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் காய்ச்சல் அறிகுறியும் இருந்தது. இதையடுத்து சிறுவன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இதில் பள்ளி மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவனுக்கு தேவையாக அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மருத்துவ முகாம் அமைப்பு

இதையடுத்து மாவட்ட சுகாதார பணி துணை இயக்குனர் அருணா அறிவுரையின்படியும், மாவட்ட மலேரியா அலுவலர் கல்விக்கரசன் ஆகியோர் ஆலோசனைபடியும் வட்டார சுகாதாரத்துறையினர் எஸ்.அய்யம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியினை மேற்கொண்டனர். மேலும், 10 மஸ்தூர் பணியாளர்களைக் கொண்டு தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. நீர்கலன்களில் அபேட் மருந்து ஊற்றப்பட்டு கொசு புழுக்கள் அழிக்கப்பட்டது. புகை மருந்தும் அடிக்கப்பட்டது. மேலும், மருத்துவ முகாம் மூலம் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, காய்ச்சல் உள்ளவர்களிடம் பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

டெங்கு தடுப்பு பணியினை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா ஆய்வு செய்தார். இந்த பணியில் சுகாதார ஆய்வாளர்கள் சந்தோஷ் குமார், சத்தியசீலன், அப்துல் நசீர், கார்த்திக் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மருத்துவ பணிகளுக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்பார்வையாளர் முருகதாஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.


Next Story