டெங்கு காய்ச்சல் எதிரொலி: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு


டெங்கு காய்ச்சல் எதிரொலி: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
x

டெங்கு காய்ச்சல் எதிரொலியாக வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கரூர்

கரூர் மாநகராட்சி 29-வது வார்டுக்கு உட்பட்ட குமரன் நகர் பகுதியில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று வீடு, வீடாக சென்று அப்பகுதியில் உள்ள வீடுகளில் திறந்த நிலையில் தண்ணீர் இருக்கிறதா?, அந்த தண்ணீர் தொட்டிகளில் கொசு புழுக்கள் இருக்கின்றதா? என்றும் ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதியில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.

தொடர்ந்து வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை 5 நாட்களுக்கு ஒருமுறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக கழுவ வேண்டும். நீர் தேக்கி வைக்கும் பாத்திரங்களை கொசு புகாமல் நன்றாக மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


Next Story