டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
திருப்பூர்
திருப்பூர்
காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ் உத்தரவின் பேரிலும் துப்புரவு ஆய்வாளர் சரவணன் மேற்பார்வையிலும் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் உள்ள கடைகள், வீடுகள், பஸ் நிலையம், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என அனைத்து இடங்களிலும் நிலவேம்பு கசாய குடிநீரானது வழங்கப்பட்டது. அம்மா உணவகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் காங்கயம் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்திருக்கவும் தண்ணீரை காய்ச்சி குடிக்கவும், முன்னெச்சரிக்கையாக நிலவேம்பு கசாயக் குடிநீர் குடிக்கவும் நகராட்சி ஆணையாளர் அறிவுறுத்தினார்.
-----------
Related Tags :
Next Story