சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 20 May 2023 11:50 PM IST (Updated: 20 May 2023 11:58 PM IST)
t-max-icont-min-icon

சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்நடந்தது.

ராணிப்பேட்டை

நெமிலி

சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

பனப்பாக்கத்தை அடுத்த சிறுவளையம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறுவளையம் ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி தயாளன் தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி, சுகாதார ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பழைய டயர், உடைந்த பாட்டில்கள், டீ கப்புகள் ஆகியவற்றை வீடுகளின் அருகிலிருந்து அகற்றவேண்டும். தொட்டிகளில் நீண்ட நாட்களாக தேங்கும் நீரை அப்புறப்படுத்தவேண்டும்.

அனுதினமும் கைகளை கழுவவேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து சுகாதார துறையின்மூலம் விளக்கிகூறப்பட்டது. இதில் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Next Story