இஞ்சிமேடு கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


இஞ்சிமேடு கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

இஞ்சிமேடு கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை

இஞ்சிமேடு கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இஞ்சிமேடு கிராமத்தில் டெங்கு தடுப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதனையொட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் கிராமத்துக்கு வந்த பொதுமக்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இதனை இஞ்சிமேடு பெரிய மலை திரு மணி சேரை உடையார் கோவில் சிவயோகி சித்தர் ஐ.ஆர்.பெருமாள் சுவாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை செய்யாறு மாவட்ட துணை சுகாதார பூச்சியியல் வல்லுனர் துரைராஜ், தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ''குடிநீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க வேண்டும்.

யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுகி சிகி்சை பெற வேண்டும். வீட்டுக்கு முன்பு பின்பு உள்ள பள்ளங்களில் தண்ணீரை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் டெங்கு கொசுக்கள் தடுப்பதற்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்'' என்றார்.

விழிப்புணர்வு ஊர்வலத்தில் பெரணமல்லூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிநாட்டு நலப்பணிதிட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பராஜ், சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர், டெங்கு களப்பணியாளர்கள் தேங்காய் மட்டை, டயர், உடைந்த பானைகள், ஆகியவை அகற்றினர். க்தெருக்களில் உள்ள கால்வாய்களில் 'டெமிபாஸ்' மருந்து தெளிக்கப்பட்டது. பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.


Next Story