டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்
கே.வி.குப்பத்தில் 3 இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்
கே.வி.குப்பம் தாலுகா காவனூரை அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை, வேலம்பட்டு, கீழ்விலாச்சூர் ஆகிய கிராமங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார நடமாடும் மருத்துவ குழு அலுவலர் பி.ஜி.முருகேசன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சதீஷ், பிரதீப்குமார் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
காய்ச்சல் உள்ளவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சலின் பாதிப்புகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முகாமை, மாவட்ட பூச்சியியல் அலுவலர் முனிசாமி, பிறப்பு இறப்பு மாவட்ட கூடுதல் இயக்குனர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் த.கல்பனா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story