டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது.
தொடர் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க திருச்சி மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தண்ணீர் தேங்கி இருக்கும் பொது இடங்களிலும், தண்ணீர் தொட்டிகளிலும் கொசுப் புழுக்கள் உருவாகுவதை தடுப்பதற்காகவும், அவற்றை கண்டறிந்து அழிப்பதற்காகவும் மாநகராட்சி சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநகராட்சி 63-வது வார்டில் உதவி ஆணையர் சண்முகம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் வினோத்கண்ணா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் திருச்சி, கே.கே.நகர் பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை சோதனை செய்த அவர்கள் தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு ஏதேனும் உருவாகி உள்ளதா என்றும் அப்படி உருவாகி இருந்தால் மருந்துகளை ஊற்றி அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு கொசு உருவாகுவது தொடர்பாக அறிவுரைகளையும் வழங்கினர்.