டெங்கு தடுப்பு பணி


டெங்கு தடுப்பு பணி
x

முத்துப்பேட்டை பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

திருவாரூர்

முத்துப்பேட்டை வட்டாரத்தில் பல்வேறு பகுதியில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று முத்துப்பேட்டையை அடுத்த வங்கநகர், தில்லைவிளாகம், கோவிலூர் மற்றும் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்த பணிகளை மாவட்ட பூச்சியியல் அலுவலர் சிங்காரவேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். முத்துப்பேட்டை கருமாரியம்மன் தெரு பகுதியில் பொது மக்களுக்கு டெங்குகாய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த பணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், செந்தில், கதிரவன், பாலசண்முகம், விக்னேஷ் மற்றும் பலர் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story