டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி விழிப்புணர்வு கூட்டம்


டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி விழிப்புணர்வு கூட்டம்
x

கரூரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று கரூர் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநகர நல அலுவலர் லட்சியவர்ணா முன்னிலை வகித்தார். அப்போது ஆணையர் கூறும்போது, டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும். கரூரில் டெங்கு வருவதற்கு வாய்ப்பில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் செய்ய வேண்டும். ஒருவருக்கு டெங்கு ஏற்பட்டால், மற்றவர்களுக்கு ஏற்படாதவாறு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த வேண்டும், என்றார். இதில் கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார செவிலியர்கள், மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story