ஆனைமலையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்


ஆனைமலையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர்

ஆனைமலை

ஆனைமலை பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நோட்டீசு வழங்கி வருகின்றனர். மேலும் ஆனைமலை ஒன்றியத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அவ்வப்போது பொழிவதால் தண்ணீர் தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசு உற்பத்தி யாக வாய்ப்பு உள்ளது. இதனால் கிருமி நாசினி மருந்து ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், காய்ச்சல், வாந்தி, தோலில் தடிப்புகள், உடல்வலி மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அல்லது சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இதேபோல் ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொசு மருந்தும்அடிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story