ஆஸ்பத்திரியில் டெங்கு சிறப்பு வார்டு தொடக்கம்


ஆஸ்பத்திரியில் டெங்கு சிறப்பு வார்டு தொடக்கம்
x
தினத்தந்தி 17 Sept 2023 12:15 AM IST (Updated: 17 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டெங்கு சிகிச்சை சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதை தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏராளமானோருக்கு ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலருக்கு டெங்கு அறிகுறி தென்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டெங்கு சிகிச்சை சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கொசுவலைகளுடன் கூடிய படுக்கைகள், சுவாச கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. டெங்கு அறிகுறிகளுடன் வந்தால் அவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாக ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story