டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவல்:மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவல்:மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்-முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x

டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டெங்கு உள்பட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. புதுவிதமான தொண்டை வலி, காய்ச்சல், கடுமையான தலைவலி போன்ற அறிகுறிகளை தெரிவிக்கின்றனர். இதில் அதிகமான நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதில் குழந்தைகள் அதிகம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதார துறை தற்போது காய்ச்சல் முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. டெங்கு அதிகமாக உள்ள நேரங்களில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையோடு, உள்ளாட்சி, நகராட்சி உள்பட துறைகளை சேர்த்து மாவட்ட வாரியாக கள ஆய்வு நடத்த வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பு முகாம்களை நடத்த வேண்டும். காய்ச்சலுக்கான சிறப்பு வார்டுகளை அதிகமான படுக்கைகளோடு அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு உரிய காலத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை அரசு கண்காணிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்த பின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் வழங்கப்படும் தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கட்சி அலுவலகத்தில் மகளிர் அணி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story