காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு அனுமதி மறுப்பு; பொதுமக்கள் திரண்டதால் போலீஸ் குவிப்பு

திசையன்விளையில் காமராஜர் பிறந்தநாள் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் திரண்டனா். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை நேரு திடல் அருகில் பனங்காட்டு படை கட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) காமராஜர் பிறந்தநாள் விழாவுக்காக பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடந்து வந்தது. விழா நடத்த போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பந்தல் அமைக்கும் பணியை நிறுத்தும்படி போலீசார் கூறினர். தகவல் அறிந்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்தில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழாவிற்கு அமைக்கப்பட்டு இருந்த மேடை மற்றும் பந்தல் அலுவலக பெயர் பலகை அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story






