தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு


தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு
x

மொரப்பூரில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் தேர்வர்கள் கண்ணீருடன் சென்றனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையம் அமைக்கப்பட்டு நேற்று காலை தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்திற்கு 5 நிமிடம் தாமதமாக வந்த தேர்வர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் அங்கு வந்த அரூர் உதவி கலெக்டர் விஸ்வநாதனிடம் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு விதிமுறைகளின்படி தாமதமாக வந்த தேர்வர்களை உள்ளே அனுமதிக்க வாய்ப்பு இல்லை என உதவி கலெக்டர் கூறினார். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அழுதவாறு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து தேர்வர்கள் கூறும்போது, நாங்கள் காலை 9 மணி 5 நிமிடத்திற்கு வந்துவிட்டோம். ஆனால் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. நாங்கள் பயிற்சி மையம் சென்று படித்து வந்தோம். போக்குவரத்து காரணங்களுக்காக 5 நிமிடம் தாமதமாக வந்தோம். ஆனால் தேர்வு எழுத அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கண்ணீருடன் கூறினர்.


Next Story