சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு


சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள  கொலை வழக்கு கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுப்பு
x

சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலை வழக்கு கைதிகளை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

சேலம்

சேலம்,

கோவை சரவணம்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த 2 கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 10 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிவா, அமர்நாத் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் சிறையில் பணியில் இருந்த வார்டன் கார்த்திக்கை பல்தேய்க்கும் பிரசால் குத்தினர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்களுடன் தொடர்புடைய மற்ற 8 பேரும் சேலம் சிறையில் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அவர்களை பார்ப்பதற்காக கோவையில் இருந்து உறவினர்கள் சிலர் சேலம் மத்திய சிறைக்கு நேற்று காலை வந்தனர். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை பார்ப்பதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து அவர்களிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தனி அறைகளில் அடைக்கப்பட்ட கைதிகளை 90 நாட்களுக்கு உறவினர்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென கொலை வழக்கில் கைதான மணி என்பவரின் தாய் சுமதி மயங்கி விழுந்தார். அவருக்கு மற்றவர்கள் தண்ணீர் கொடுத்தனர். கைதிகளை பார்க்க சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் உறவினர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


Next Story