கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வழியனுப்பி வைத்த பொதுமக்கள்


கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டு சென்ற  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வழியனுப்பி வைத்த பொதுமக்கள்
x

கோத்தகிரி வழியாக சென்னை புறப்பட்டு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக பொதுமக்கள் வழியனுப்பி வைத்தனர்.

நீலகிரி

கோத்தகிரிமுதல்-அமைச்சர் ஸ்டாலின் கடந்த 19 -ந் தேதி மாலை மலர்காட்சியைத் துவக்கி வைப்பதற்காக ஊட்டிக்கு வந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் ஊட்டியில் இருந்து புறப்பட்டு கோத்தகிரி வழியாக கோவைக்கு சென்றார். அவரை வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்று வழியனுப்பி வைத்தனர். கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் காரில் இருந்தவாறே கட்சியினரிடம் சால்வை, மலர்கொத்துக்களை வாங்கிய அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றார். அங்கு நின்றுக் கொண்டிருந்த சிறுவன் அவருடன் செல்ஃபி எடுக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து, சிறுவனை அருகில் வரச்சொல்லி, அவருடன் முதல்வர் செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


Next Story