திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு


திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
x

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது.

திருச்சி


மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் காலையில் பல்லக்கிலும், இரவில் சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளிவாகனம், அன்ன வாகனம், பூத வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் 5-ம் நாளான நேற்று இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது.


Next Story