தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெறலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெறலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் விண்ணப்பித்து பயன்பெற முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி சார்ந்தோர் சான்று பெறலாம். மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் https://esmwel.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தும் சான்று பெற்றிடலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கு, முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சார்ந்தோர் சான்றிதழை பயன்படுத்த கூடாது.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story