அழிந்து வரும் ஆந்தைகளை பாதுகாக்க கூண்டுகள் வைப்பு


அழிந்து வரும் ஆந்தைகளை பாதுகாக்க கூண்டுகள் வைப்பு
x

சிங்காநல் லூர் குளக்கரையில் ஆந்தைகளை பாதுகாக்கும் விதமாக மரங்களில் கூண்டுகள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கோயம்புத்தூர்

கோவை

உலக பல்லுயிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 22-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை சிங்காநல் லூர் குளக்கரையில் பல்லுயிர் பாதுகாப்பு தினம் நடைபெற்றது.

அழிந்து வரும் ஆந்தைகளை பாதுகாக்கும் விதமாக குளக்கரையில் உள்ள மரங்களில் கூண்டுகள் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை கலெக்டர் சமீரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதில் கோவை கோட்ட வன அதிகாரி அசோக்குமார், வனமர பியல் கல்லூரி இயக்குனர் குன்னிகண்ணன், சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மைய விஞ்ஞானி பாபு மற்றும் மாணவ -மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்காநல்லூர் குளக்கரையில் உள்ள தாவரங்கள், அரிய வகை பூச்சிகள் குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறப்பட்டது.

இது குறித்து நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தினர் கூறுகையில், எலிகளின் எண்ணிக்கையை கட்டுப் படுத்துவதில் ஆந்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சிங்காநல்லூர் குளக்கரையில் 453 வகை தாவரங்கள், மூலிகை செடிகள், நன்னீர் ஆமைகள் உள்ளன.

கோவையில் 5 வகையான ஆந்தைகள் உள்ளன. கட்டிடங்கள் அதிகரித்து வருவதால் ஆந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆந்தைகளை பாதுகாக்க இன்னும் 4 மாதங்களில் மாநகர் முழுவதும் 200 இடங்களில் கூண்டுகள் வைக்க திட்டமிட்டு உள்ளோம் என்றனர்.


Next Story