ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவருக்கும் வைப்புத்தொகை கிடைக்க கூடாது;ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு


ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை  எதிர்த்து போட்டியிடும் அனைவருக்கும் வைப்புத்தொகை கிடைக்க கூடாது;ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி பேச்சு
x

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவருக்கும் வைப்புத்தொகை கிடைக்க கூடாது என்று ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

ஈரோடு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து போட்டியிடும் அனைவருக்கும் வைப்புத்தொகை கிடைக்க கூடாது என்று ஈரோட்டில் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

தீவிர பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தி.மு.க. தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் பகுதியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வைப்புத்தொகை

முன்னதாக அமைச்சர் சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி 39-வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட்ட கீதாஞ்சலி செந்தில்குமார், ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவருக்கும் வைப்புத்தொகை கூட கிடைக்கவில்லை. அதேபோல் தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் அனைவருக்கும் வைப்புத்தொகை கிடைக்கக்கூடாது என்றால் நீங்கள் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். பெண்களுக்கு சுய உதவிக்குழு தள்ளுபடி, கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைகளுக்கு கீழ் அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி, அரசு பள்ளிக்கூடங்களில் படித்துவிட்டு உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை இப்படி பல்வேறு திட்டங்களை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி உள்ளார்.

தி.மு.க. வாக்குறுதி...

வீட்டில் இருந்தபடியே ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முதல் -அமைச்சரிடம் நேரடியாக பேசி உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பார். தேர்தலில்போது தி.மு.க. சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

அப்போது அவருடன் திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், 39-வது வார்டு செயலாளர் கே.டி.மகேஷ்வரன், 39-வது வார்டு கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், கருங்கல்பாளையம் மக்கள் சேவை மைய தலைவரும், தி.மு.க. பிரமுகருமான கேபிள் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story