கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் பங்கேற்பு
சு.பொலக்குணம் கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் கலந்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர்
சு.பொலக்குணம் கிராம சபை கூட்டத்தில் துணை சபாநாயகர் கலந்து கொண்டார்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சு.பொலக்குணம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் குப்புஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், பற்றாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாதங்கராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''மகளிருக்கு ரூஆயிரம் உரிமைத் தொகை, டவுன் பஸ்களில் இலவச பயணம் போன்றவை உள்பட மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தி.மு.க ஆட்சியில்தான் கிராமப்புறங்கள் வளர்ச்சி அடையும் வகையில் சாலை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் எண்ணற்ற திட்டப் பணிகள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன'' என்றார்.
அவரிடம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை வழங்கினர். மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் துணை சபாநாயகர் கூறினார்.
அதைத் தொடர்ந்து ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கக்கப்பட்டது. கிராமத்திற்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தீர்மான விவரங்களை ஊராட்சி செயலர் பாஸ்கரன் வாசித்தார்.
இதில் பல்வேறுஅரசுத் துறை அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
=========
3 காலம்