செயல் விளக்கம்


செயல் விளக்கம்
x

வேதாரண்யத்தில் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றுவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி பகுதியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஊர்வலம், கடற்கரையில் தூய்மை பணி, மாணவ-மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வலியுறுத்தி ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று வேதாரண்யம் குப்பை கிடங்கில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி? என்பது குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் நடந்தது. இதில் நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் வெங்கட லெட்சுமணன், நகர மன்ற துணைத்தலைவர் மங்களநாயகி, துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக நகராட்சியில் குப்பை கிடங்கில் பணிபுரியும் பணியாளர்கள் குப்பைகளை எப்படி கையாளுகின்றனர், குப்பையில் இருந்து உரம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.


Related Tags :
Next Story