தீ தடுப்பு செயல் விளக்கம்


தீ தடுப்பு செயல் விளக்கம்
x

அரக்கோணம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தீ தடுப்பு செயல் விளக்கம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தீத்தடுப்பு செயல் விளக்க முகாம் நடைபெற்றது. அரக்கோணம் தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் (பொறுப்பு) தெய்வமணி தலைமையிலான வீரர்கள் கலந்து கொண்டு வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரம், எண்ணெய், துணி மற்றும் ஏனைய பொருட்களால் ஏற்படும் தீ விபத்துக்களின் வகைகள் குறித்தும், எளிதில் தீப்பற்றக்கூடிய உபகரணங்களை பயன்படுத்தும் விதம், எதிர்பாராதவிதமாக தீப்பற்றினால் அதனை எவ்வாறு கையாண்டு தீயை மேலும் பரவாமல் தடுப்பது என்பது பற்றி செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story