பாபநாசம் பிாிவு வாய்க்காலை தூர்வார வேண்டும்


பாபநாசம் பிாிவு வாய்க்காலை தூர்வார வேண்டும்
x

மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பு ராஜகிரி அருகே பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

மெலட்டூர்;

மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பு ராஜகிரி அருகே பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோாிக்கை விடுத்துள்ளனர்.

பாபநாசம் பிரிவு வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் வங்காரம்பேட்டை அருகே பாபநாசம் பிரிவு வாய்க்காலை சில ஆண்டுகளாக தூர்வாராததால் வாய்க்காலில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, ராஜகிரி அருகே குடமுருட்டி ஆற்றின் மூலம் தண்ணீர் வசதிபெறக்கூடிய பாபநாசம் பிரிவு வாய்க்கால் வன்னியர்தெரு, வங்காரம்பேட்டை மேலசெங்குந்தர்தெரு, கீழ செங்குந்தர்தெரு ஆகிய தெருக்களுக்கு மழைகாலங்களில் முக்கிய வடிகால் வாய்க்காலாகவும், கஞ்சிமேடு, பாபநாசம் பகுதிக்கு முக்கிய பாசன வாய்க்காலாகவும் உள்ளது.

தூர்வார கோரிக்கை

சில ஆண்டுகளாக இந்த வாய்க்கால் தூர்வாராததால் புதர்கள் மண்டி காட்சி அளிக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறக்கூடிய விளை நிலங்கள் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது.தற்போது வாய்க்காலின் பல பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. பம்பு செட் மற்றும் மின்மோட்டாரை நம்பி இப்பகுதியில் விவசாயம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இதேநிலை நீடித்தால் விவசாயம் முழுமையாக பாதிக்கும் அபாயம் உள்ளது.எனவே அரசு மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பு பாபநாசம் பிரிவு வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலின் முழு தூரத்தையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story