திருச்செந்தூரில் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு


திருச்செந்தூரில் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆதரவற்றோர் மனநல காப்பகத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம், ஆதரவற்றோர் மன நல காப்பகத்தினை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சிகிச்சை பெறுவோரிடம் அவர் நலம் விசாரித்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் கண்மணி, தாசில்தார் வாமனன், அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் பொன்ரவி மற்றும் மன நலக்காப்பக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story