ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்தியவர் கைது


ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்தியவர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2022 11:28 PM IST (Updated: 10 Jun 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

பாணாவரம் அருகே ஆழ்துளை கிணற்றை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தை அடுத்த சூரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 56). இவர்களின் மகள் கிரிஜா (38). இவரின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கிரிஜா தனது தாய் வீட்டுக்கு வந்து வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த தாயார் ஜெயலட்சுமி தனது மகளை கண்டித்து, 4 மாதங்களாக வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருந்ததாக தெரிகிறது.

ரமேஷ் உடனான உறவை விட்டு விடும்படி குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர். மேலும் கிரிஜாவை பேசவிடாமல் தடுத்தது குறித்து தகவல் அறிந்த ரமேஷ், ஜெயலட்சுமியும், ஆறுமுகத்தையும் ஆபாசமாக பேசி ஒழித்து விடுவேன், எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ரமேஷ், ஜெயலட்சுமியின் விவசாய நிலத்தில் புதிதாக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கற்களை போட்டு அடைத்து குழாயை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஜெயலட்சுமி பாணாவரம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமுத்து வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.


Related Tags :
Next Story