1,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
குடியாத்தம் பூங்குளம் மலைப்பகுதியில் 1,000 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
வேலூர்
குடியாத்தம் அக்ராவரம் மற்றும் பூங்குளம் பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் நேற்று பூங்குளம் மலைப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பேரல்களில் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்கான அடுப்பு உள்ளிட்ட பொருட்களை போலீசார் அகற்றினர். சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த ஒரு மூட்டை வெல்லத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பாக பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story