2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:47 PM GMT)

கல்வராயன்மலை வனப்பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள ஆவலூர், பொரசப்பட்டு ஆகிய கிராம வனப்பகுதிகளில் செல்லும் நீரோடைகளில் சமூக விரோதிகள் சிலர் சாராய ஊறல் அமைத்துள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கரியாலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையிலான போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற கிராம வனப்பகுதியில் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்ச பேரல்களில் ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார், பேரல்களில் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் அங்கு சாராய ஊறல் அமைத்த நபா்கள் யார்? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story