30 ஹெக்டேர் வாழை மரங்கள் நாசம்


30 ஹெக்டேர் வாழை மரங்கள் நாசம்
x

ஆற்காடு அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 30 ஹெக்டேர் வாழை மரங்கள் நாசமாயின.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா ஆற்காடு அடுத்த மேல குப்பம் பகுதியில் சுமார் 30 ஹெக்டேர் பரப்பளவில் 65-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை மரங்கள் பயிரிட்டிருந்தனர். இந்தப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானது. இதனால் வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே மேலகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் பலராமன், தோட்டக்கலைத் துறை அலுவலர் சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மேலகுப்பம் பகுதிக்குச் சென்று சேதமடைந்த வாழை மரங்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து தாசில்தாருக்கு அறிக்கை அளித்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story