4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


4,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

வாணியம்பாடி அருகே 4,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திம்மாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லையில் உள்ள கொரிப்பள்ளம் தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவில் சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை முற்றிலும் அழிப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் தொடர்ந்து இரு மாநில சாராய வியாபாரிகளும் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருகின்றனர்.

இந்த நிலையில் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று மலைப்பகுதியில் சாராய வேட்டை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 4,500 லிட்டர் சாராய ஊறல்கள், மூலப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story