சாராய ஊறல்கள் அழிப்பு


சாராய ஊறல்கள் அழிப்பு
x

வெறையூர் அருகே சாராய ஊறல்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம்

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின்பேரில் கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி மேற்பார்வையில் வெறையூர் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் காடகமான் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பாறை அருகில் 2 தொட்டியில் சாராய ஊறல் இருந்ததை கண்டறிந்து அதனை அதே இடத்தில் கொட்டி அழித்தனர்.

மேலும் சாராயம் ஊறல் வைத்தவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து வனப்பகுதிகள் மட்டுமல்லாமல் அப்பகுதிகளில் உள்ள சந்தேகப்படும்படியான இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story