காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் நாசம்: வேளாண் குழுவினர் ஆய்வு


காட்டுப்பன்றிகளால் மக்காச்சோள பயிர்கள் நாசம்: வேளாண் குழுவினர் ஆய்வு
x

காட்டுப்பன்றிகள் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்தது. இதனை வேளாண் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அடுத்துள்ள அனுக்கூர் கிராமத்தில் காட்டுப்பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அப்பகுதி விவசாயிகள் பயிரிட்டு இருந்த மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசப்படுத்தின. இதையடுத்து, அப்பகுதியில் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் எனவும், சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களை வேளாண்மை இணை இயக்குனர் கீதா தலைமையிலான குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story