ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள்-மாத்திரைகள் அழிப்பு


ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள்-மாத்திரைகள் அழிப்பு
x

ரூ.1,800 கோடி மதிப்பிலான போதை பொருட்கள்-மாத்திரைகள் அழிக்கப்பட்டன.

திருச்சி

திருச்சி:

போதை மருந்து ஒழிப்பு தினம்

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக மத்திய நிதி அமைச்சகம் கடந்த 6-ந் தேதி முதல் வருகிற 12-ந்தேதி வரை ஐக்கானிக் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. நேற்று போதை மருந்து ஒழிப்பு தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் 14 இடங்களில் 42 டன் கணக்கில் பல்வேறு போதை மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகள் எரிக்கப்பட்டது.

எரித்து அழிப்பு

இதில் திருச்சி சுங்கத்துறையினர் 303.403 கிலோ போதை பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 60 ஆயிரம் போதை மாத்திரைகளை எரித்து அழித்தனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.1,800 கோடியாகும். இதில் சுங்கத்துறை முதன்மை ஆணையர் உமா சங்கர், திருச்சி சுங்க ஆணையர் அனில், கூடுதல் இயக்குனர் ஜெனரல் திருநாவுக்கரசு மற்றும் சுங்க அதிகாரிகள் முன்னிலையில் இந்த பணி நடந்தது.

தற்போது அழிக்கப்பட்ட போதை பொருட்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வருவாய் புலனாய்வு பிரிவினரால் தூத்துக்குடி துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story