தேசூர் சீதாதேவி சமேத கோதண்ட ராமர் கோவிலில் 5-ம் சனி வார விழா

தேசூர் சீதாதேவி சமேத கோதண்ட ராமர் கோவில் 5-ம் சனி வார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேத்துப்பட்டு
தேசூர் சீதாதேவி சமேத கோதண்ட ராமர் கோவில் 5-ம் சனி வார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேசூர் பாடசாலை தெருவில் அமைந்துள்ள சீதா தேவி சமேத கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கிய முதல் சனிக்கிழமையை தொடர்ந்து 5 சனிக்கிழமைகள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. அதன்படி 5-வது சனி வார விழா நடந்தது.
இதனையொட்டி காலையில் சீதா தேவி, கோதண்ட ராமர், லட்சுமணன், ஆஞ்சநேயர் ஹயக்ரீவர்பெருமாள், பெருமாள் கருடன், சக்கரத்தாழ்வாருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், மற்றும் மூலிகை வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
பின்னர் சீதாதேவி, கோதண்ட ராமர், லட்சுமணன் உற்சவமூர்த்திகள் டிராக்டரில், முக்கிய வீதியின் வழியாக வீதி உலாவாக எடுத்து வந்தனர். ஆஞ்சநேயர் வேடம் அடைந்து பஜனை கோஷ்டிகள் நாதஸ்வர மேளதாள இசையுடன் ஊர்வலமாக வந்தனர்,
அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வணங்கினார்கள். வீதி உலா மீண்டும் கோவிலில் நிறைவடைந்ததும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






