சாராய கடத்தலில் ஈடுபட்டவர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது


சாராய கடத்தலில் ஈடுபட்டவர் மீது தடுப்புக்காவல் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 6 Jun 2023 6:45 PM GMT (Updated: 6 Jun 2023 6:46 PM GMT)

சாராய கடத்தலில் ஈடுபட்டவரை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று மருதாடு சுங்க சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சாராயம் கடத்தி வந்த அழகியநத்தம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மும்மூர்த்தி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மும்மூர்த்தி மீது பண்ருட்டி மற்றும் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்களில் 4 சாராய கடத்தல் வழக்குகள் உள்ளன.

இதனால் அவர் தொடர்ந்து சாராயம் கடத்துவதை கட்டுப்படுத்தும் பொருட்டு, மும்மூர்த்தியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் கலெக்டர் அருண்தம்புராஜ், மும்மூர்த்தியை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மும்மூர்த்தியிடம், அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story