தேவகோட்டை நகர் மன்ற கூட்டம்
தேவகோட்டை நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை,
தேவகோட்டை நகர் மன்ற மாதாந்திர கூட்டம் அதன் தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ரமேஷ், மேலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர். நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் நகராட்சி நிர்வாக இயக்குனர் காணொலி ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தியபடி ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் சாலை பணிகள் மேற்கொள்வது.
நகராட்சியில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. எனவே, சில பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக வடிகால் கட்டுவது. பஸ் நிலையம் மற்றும் ராம் நகரில் உள்ள கழிப்பிடங்களை ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்துவது, 2, 13-வது வார்டில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 3 மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிதாக மின்கம்பம் அமைப்பது. தேவகோட்டை மருத்துவமனை சாலையில் உள்ள உயர்மட்ட நீர்த்தேக்க தொட்டியிலிருந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும், அரசு ஆஸ்பத்திரிக்கும் சுத்தமான குடிநீர் வழங்க ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 13-வது வார்டில் உள்ள கண்மாயில் கழிவுநீர் கலக்காதவாறு கண்மாயை சுற்றி ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது. ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை 12 தெருக்களில் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.